Our Books
பெரும்வெற்றுக் காலம்
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்றவைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எள்ளும் தைரியம்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபத்தை கூட குறைவாய் கூறல் – இப்படி ஒரு தனித்துவமான எழுத்து நடை எப்படி இருக்கும்? அதை இந்த நூல் காட்டுகிறது.
நகைச்சுவை நிறைந்த தோற்றத்துக்குள் ஆழமான சிந்தனைகள் மறைந்து கிடக்கும் இந்த நூல், வாசித்துக்கொண்டே செல்லும் போது பொழுதுபோக்கையும், முடித்து வைக்கும் போது சிந்தனையையும் தரும் ஒரு வாசிப்பு அனுபவமாக மாறுகிறது.
