YouTube Creator Economy

YouTube தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நிர்வாக இயக்குனர் திரு அஜய் வித்யாசாகர் நீயா நானா கோபிநாத் அவர்களுக்கு ஒரு நீண்ட நேர்காணல் வழங்கியிருக்கிறார். அதில் கவனிக்கத்தக்க சில அம்சங்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. Creator Economy வளர்ச்சி

Creator Economy நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. விளம்பரங்கள் மூலம் தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு டாலரில் 55% வருவாயை Qualified Content Creator-க்கு YouTube வழங்குகிறது.

2. இந்தியாவின் GDP பங்களிப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) YouTube Creator Economy பங்களிப்பு சுமார் 16,000 கோடி ரூபாய்.

3. வேலைவாய்ப்பு உருவாக்கம்

இதனால், சுமார் 9,30,000 பேருக்கு (Full time YouTubers) வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. அரசுகளே வேலைவாய்ப்புகளை உருவாக்க தத்தளித்து வருவதை இந்த எண்ணிக்கையோடு இணைத்துச் சிந்திக்கலாம்.

4. வருவாய் வழிமுறைகள்

திறமையான கிரியேட்டர்கள் YouTube தரும் வருவாயை தாண்டி சம்பாதிக்க பல வழிமுறைகளை YouTube உருவாக்கித் தந்திருக்கிறது. மெம்பர்ஷிப், YouTube ஷாப்பிங் போன்றவற்றைப் பயன்படுத்தியும் சம்பாதிக்க முடியும். கூடுதலாக பிராண்ட் விளம்பரங்கள், கொலாப்பரேஷன்கள் என்று தனியாகவும் சம்பாதிக்கிறார்கள்.

5. YouTube Studio தரவு ஆய்வு

திறமையான YouTubers YouTube Studio செயலியைப் பயன்படுத்தி, தரவுகளை ஆராய்ந்து, பார்வையாளர்கள் எந்த இடத்தில் வீடியோவைப் பார்ப்பதை நிறுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து தங்களின் உத்திகளை உடனுக்குடன் மாற்றுகிறார்கள்.

6. கதை சொல்லும் கலை

வீடியோக்கள் சும்மா வைரல் ஆவதை விட, ஒரு நல்ல கதையை சுவாரசியமாகச் சொல்வதே நீண்ட காலத்திற்குத் துணைநிற்கும் என்று வித்யாசாகர் வலியுறுத்துகிறார். சிறுசிறு வீடியோக்களால் வியூவ்ஸ் ஏற்றலாமே தவிர வருமானம் ஏறாது.

7. பல மொழி ஆடியோ வசதி

ஒரே வீடியோவில் பல மொழிகளில் ஆடியோவை இணைக்கும் வசதி (Multi-language audio) தொழில் வளர்ச்சிக்கான பெரிய காரணியாக மாறியுள்ளது. இந்தியாவில் 88% மக்களை ஆங்கிலம் மட்டும் சென்றடையாது. எனவே, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற வட்டார மொழி வீடியோக்களே அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.